முல்லைத்தீவில் சிங்களக்குடியேற்றம் இடம்பெற்றிருந்தால் அதனை தடுத்து நிறுத்துவேன் - ஜனாதிபதி

Published By: Priyatharshan

23 Aug, 2018 | 09:46 AM
image

மகாவலி அதிகாரசபை முல்லைத்தீவு மாவட்டத்தில் அடாத்தாக குடியேறியுள்ள மக்களுக்கு காணி உத்தரவு பத்திரங்களை வழங்கியதா? என்பது தொடர்பில் நான் எதனையும் அறியவில்லை. அவ்வாறு நடந்திருந்தால் அதனை நான் தடுத்து நிறுத்துவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். 

மயிலிட்டி துறைமுகம் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது. 

அந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நானும் எதிர்கட்சியின் தலைவர்  இரா.சம்மந்தனும் ஜனாதிபதியான உங்களை சந்தித்தபோது மகாவலியூடாக தண்ணீரை கொண்டுவருவதற்கு முன்னர் சிங்கள மக்களை கொண்டுவந்து குடியேற்றாதீர்கள் என கேட்டிருந்தோம். 

எங்களுடைய மக்களுக்கு சொந்தமான மண்ணை வேறு யாருக்கும் தாரைவார்க்காதீர்கள் என கேட்டோம். இன்று எங்களுடைய மண்ணில் அடாத்தாக தங்கியுள்ள சிங்கள மக்களுக்கு காணி உத்தரவு பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதனை நீங்கள் பொறுப்பாக இருக்கும் மகாவலி அதிகாரசபை வழங்கியுள்ளது. நாங்கள் இப்போதும் கேட்கிறோம் எங்கள் மக்களுக்கு சொந்தமான மண்ணை வேறு யாருக்கும் தாரை வார்க்காதீர்கள் என உரையாற்றி இருந்தார். 

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகாவலி அதிகாரசபை அவ்வாறு காணிகளுக்கான உத்தரவு பத்திரங்களை வழங்கியதாக நான் அறியவில்லை. அப்படி நடந்திருந்தால் அதனை நான் உடனடியாக தடுத்து நிறுத்துவேன். 

இவ்வாறான பிரச்சினைகள் குறித்து நாங்கள் மிகுந்த புரிந்துணர்வுடன் நடந்து கொண்டிருக்கின்றோம். இனிவரும் காலங்களிலும் இவ்வாறன பிரச்சினைகளில் மிகுந்த புரிந்துணர்வுடன் நடந்து கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47