ஹட்டன் - ரொத்தஸ் பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து நான்கு வயது சிறுவனின் சடலம் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

ஹட்டன் - ரொத்தஸ் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதரன் சபித் என்னும் குறித்த சிறுவன் நேற்று மாலை 6 மணியளவில் காணாமல் போயிருந்த நிலையில் ஆற்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். 

குறித்த சிறுவனின் சடலம் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹட்டன் நீதவானின் மேற்பார்வையின் பின்னர் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.