மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கறுவாச்சோலை பல்லாவெளிக்குளத்தில் 24 வயதையுடைய சிவனேசன் விமல்ராஜ் எனும் வவுனதீவு சிறுவாமனை பகுதியை சேர்ந்த நபர் மீன் பிடிக்கச் சென்ற வேளையிலேயே இன்று பகல்(22-08-2018) 1 மணியலவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன், கரடியனாறு பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.