கடந்த சனிக்கிழமை கற்பிட்டி கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களையும் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதி மன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த 8 மீனவர்களையும் கற்பிட்டி கடற் பகுதிக்கும் சர்வதேச கடல் எல்லைக்குமிடையே எல்லைத் தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் கடற்படையினர் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.

இன்று குறித்த வழக்கை விசாரித்த புத்தளம் நீதி மன்ற நீதவான் அனுர இந்திரஜித் 8 இந்திய மீனவர்களையும் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.