இங்கிலாந்தில் டெஸ்ட் வெற்றியை சுவைத்தது இந்தியா : வரலாற்றில் தனது பெயரையும் பதித்தார் கோலி 

Published By: Priyatharshan

22 Aug, 2018 | 05:01 PM
image

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து இரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலைபெற்றுள்ளது.

இந்த வெற்றியையடுத்து இங்கிலாந்து மண்ணில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்த அணித் தலைவர்கள் பட்டியலில் விராட் கோலியும் 6 ஆவது தலைவராக இணைந்துள்ளார்.

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அவ் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.

முதலிரு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று 2-0 என முன்னிலை பெற்றிருந்த நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டி கடந்த 18 ஆம் திகதி நொட்டிங்காமின் டிரென்ட் பிரிட்ஜியில் ஆரம்பமாகியது.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் பெற்றிபெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

இந்நிலையில் முதல் இன்னிங்சில் இந்தியா அணி 323 ஓட்டங்களையும் இங்கிலாந்து 161 ஓட்டங்களையம் பெற்றுக்கொண்டன. இதையடுத்து 168 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2 ஆவது இன்னிங்சை ஆரம்பித்த இந்தியா அணி 7 விக்கெட் இழப்புக்கு 352 ஓட்டங்களைக் குவித்து ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு 521 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதேவேளை, நேற்று போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 62 ஓட்டங்களுக்கு  4 விக்கெட்டை இழந்து அதன் ஜோஸ் பட்லர்- பென் ஸ்டோக்ஸ் ஜோடி தாக்குப் பிடித்து விளையாடிது. ஜோஸ் பட்லர் தனது முதல் சதத்தை பதிவுசெய்தார். அவர் 106 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். இருவரும் 5 ஆவது விக்கெட்டுக்கான இணைப்பாட்டமாக 169 ஓட்டங்களை சேர்த்தனர்.

அதன்பின் விக்கெட்டுகள் மளமளவென விழுந்தன. பேர்ஸ்டோவ் (0). கிறிஸ் லோக்ஸ் (4), பென்ஸ்டோக்ஸ் (62), பிராய் (20) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

நேற்றைய 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட்டுக்கு 311 ஓட்டங்களை எடுத்து இருந்தது. ரஷித் 30 ஓட்டங்களுடனும் ஆன்டர்சன் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்திலிருந்தனர். 

இன்று 5 ஆது மற்றும் கடைசி நாள் ஆட்டம் ஆம்பமாகியது. இந்திய அணி வெற்றிபெறுவதற்கு ஒரு விக்கெட் மட்டுமே மீதமிருந்தது.

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 96.2 ஓவரில் 9 விக்கெட்டை இழந்தது. இறுதி விக்கெட்டுக்கு ரஷித்- ஆண்டர்சன் ஜோடி 8.3 ஓவர்கள் விளையாடியதால் இந்தியா அணி நேற்றைய தினம் வெற்றியை ருசிக்க முடியாமல் போனது.

இன்றைய ஆட்டத்தில் ஒரு விக்கெட்டை விரைவிலேயே கைப்பற்றி வெற்றி பெறும் என்று எதிர்பார்ப்புடன் களமிறங்கிய இந்திய அணிக்கு வெற்றி காத்திருந்தது.

இந்நிலையில் இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் ஆரம்பமாகிய நிலையில், இன்றைய ஆட்டத்தின் 3 ஆவது ஓவரை அஸ்வின் வீசினார். 5 ஆவது பந்தில் ஆண்டர்சன் ரகானேயிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 

இதனால் இங்கிலாந்து 2 ஆவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 317 ஓட்டங்களைப்பெற்றது. 

இதையடுத்து இந்திய அணி 203 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பும்ரா 7 விக்கெட்டுகளையம் ஹர்திக் பாண்டியா 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-2 என பின்தங்கியுள்ளது. 4 ஆவது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

இதேவேளை, இங்கிலாந்து மண்ணில் அஜித் வடகேர், கபில்தேவ், கங்குலி, ராகுல் டிராவிட், டோனி ஆகியோர் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா- இங்கிலாந்து அணிகள் 1932 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றது. இங்கிலாந்து மண்ணில் இந்தியா 1971 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் வெற்றியை பதிவுசெய்தது.

அஜித்வடகேர் தலைமையிலான இந்திய அணி வரலாற்று வெற்றியை பெற்றது. மேலும் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

கடந்த 1986 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்தியா அணி 2 டெஸ்டில் (லார்ட்ஸ், மற்றும் சிட்னி) வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

2002 ஆம் ஆண்டு கங்குலி தலைமையில் சிட்னி டெஸ்டில் வெற்றி கிடைத்தது. 2007-ம் ஆண்டு ராகுல்டிராவிட் தலைமையிலான இந்தியா 2 ஆவது டெஸ்டில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் (1-0) கைப்பற்றியது.

2014 ஆம் ஆண்டு டோனி தலைமையில் இந்தியா லோர்ட்ஸ் டெஸ்டில் வெற்றி பெற்றது. அந்த வரிசையில் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் வெற்றியை ருசித்த 6 ஆவது இந்திய அணித்தலைவராக விராட்கோலி வரலாற்றில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35