DIMO-Tata Motors இணைந்து இலங்கையில் அறிமுகம் செய்துள்ள Tata NEXON 

Published By: R. Kalaichelvan

22 Aug, 2018 | 05:18 PM
image

• பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு வடிவங்களிலும் கிடைக்கும் முதலாவது Multi-Drive modes (3 drive modes -ECO, CITY, SPORT)உடனான A.M.T (Automated Manual Transmission)

• clutch free வாகனம் செலுத்தும் அனுபவத்துடன் gear களை கைமுறையாக மாற்றம் செய்வதற்கு ‘Manual Tip-Tronic’mode தொழில்நுட்பம்

• நகர போக்குவரத்து நெரிசலில் ‘stop - and - go’ சௌகரியத்திற்கு Smart Hill Assist உடனான Crawl function தொழில்நுட்பம்

• உற்சாகமான வாகன ஓட்டும் அனுபவத்திற்காக anti-stall, kick-down மற்றும் fast-off போன்ற Intelligent transmission controller தொழில்நுட்பம்

• drive mode based HMI themeஉடன் அதிநவீன HARMAN infotainment system தகவல் பொழுதுபோக்கு தொழில்நுட்ப வசதி

• பம்பரம் போல் சுழலும் வாழ்க்கைமுறைக்கு உதவும் வகையில் முதல் வர்க்க wearable தொழில்நுட்பம்

Tata Motors மற்றும் அதன் விநியோகத்தரான Diesel & Motors Engineering PLC (DIMO)ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து மிகவும் கவர்ச்சியான compact SUV வாகனமான NEXONஇலங்கையில் அறிமுகம் செய்து வைக்கின்றமை தொடர்பில் இன்று அறிவித்துள்ளன. aerodynamic silhouette உடன் புரட்சிகரமான “breaking the box”வடிவமைப்பில் NEXON வெளிவந்துள்ளது. 

விளையாட்டுத் தொழில்நுட்ப பண்பை அது மேம்படுத்துவதுடன், SUV  இன் தொழிற்பாடு மற்றும் விளையாட்டு வாகன வடிவமைப்பு ஆகியவற்றின் இணைப்பினைக் கொண்ட புரட்சிகரமான SUV வடிவமைப்பாக உள்ளமை அதன் தனித்துவமாகும்.

வாகனத்தின் AMT  வடிவமாக HyprDrive Self-Shift Gear களைக் கொண்ட, மிகவும் போற்றப்படுகின்ற NEXON ஐயும் Tata Motors அறிமுகப்படுத்தியுள்ளது. 

இலங்கையில்NEXON வாகனங்கள் ஆறு வடிவங்களிலும் (XE, XM, XT, XZ, XZ+, XZA+),ஆறு நிறங்களிலும்(Etna Orange, Vermont Red, Moroccan Blue, Seattle Silver, Glasgow Grey,மற்றும் Calgary White) கிடைக்கப்பெறவுள்ளன.

நாடெங்கிலுமுள்ள 38 DIMOவிற்பனைக் காட்சியறைகளிலும் இவை விற்பனை செய்யப்படவுள்ளன. 

பெட்ரோல் வாகனம் ரூபா 1.99 மில்லியன் என்ற விலையிலும் மற்றும் டீசல் வாகனம் ரூபா 4.6 மில்லியன் என்ற விலையிலும் (வாகன வரிச் சலுகைப் பத்திரத்தைக் கொண்டுள்ளவர்களுக்கான விலைகள்) XZA+ என்ற அதியுச்ச வடிவ NEXON அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன்,நிறுவனத்தின் பிரயாணிகள் பாவனை வகுப்பு வாகனங்கள் மத்தியில் மிகவும் நேசிக்கப்படுகின்ற வாகனங்களுள் ஒன்றாகவும் திகழ்கின்றது. 

பாதுகாப்பினைப் பொறுத்தவரையில் புதியதொரு தர ஒப்பீட்டு நியமத்தை ஏற்படுத்தியவாறு,Global New Car Assessment Programme (Global NCAP) ஆல் 4-star adult safety என்ற பாதுகாப்பு தரப்படுத்தலை NEXON அண்மையில் பெற்றுள்ளதுடன், இந்தியாவில் Global NCAPஇனால் பரிசோதிக்கப்பட்ட அனைத்து வாகனங்களின் மத்தியிலும் அதியுச்ச adult safety score (13.56/17.00) புள்ளிகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அறிமுக நிகழ்வில் Tata Motors நிறுவனத்தின் பிரயாணிகள் பாவனை வாகன வர்த்தகப் பிரிவின் தலைவரான மாயங்க் பரீக் உரையாற்றுகையில்,

 “அதிநவீன வடிவமைப்பு, மிகச் சிறந்த தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட சிறப்பம்சங்கள் ஆகியவற்றின் இணைப்புடன், தனித்துவமான பாணியை வெளிப்படுத்த விரும்புகின்றவர்களுக்காக NEXON அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், compact SUV பிரிவில் புதிய தர ஒப்பீட்டு நியமங்களை NEXON ஏற்படுத்தியுள்ளது. 

எமது பிரயாணிகள் பாவனை வாகனங்கள் மத்தியில் மிகவும் நேசிக்கப்படுகின்ற வடிவங்களுள் ஒன்றாக இது காணப்படுகின்றது. 

இலங்கையில் நாம் manual  மற்றும் AMT வடிவங்களை இன்று அறிமுகம் செய்து வைப்பதையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். 

இந்த ஒட்டுமொத்த வாகன வரிசையையும் அறிமுகம் செய்வதன் மூலமாக, சந்தையை பாரியளவில் அடையப்பெற்று, Compact SUV வாகனங்கள் மட்;டுமல்லாது AMT வாகனப் பிரிவிலும் எமது சந்தைப்பங்கினை அதிகரிப்பதே எமது இலக்காகும்,” என்று குறிப்பிட்டார்.

NEXON வாகனத்தை அறிமுகம் செய்யும் நிகழ்வில் DIMO  நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும்,முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே அவர்கள் உரையாற்றுகையில், “Tata Motors உடன் இணைந்து Compact SUV வாகனங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பில் இது எமது முதலாவது பெரு முயற்சியாகும். 

நிறுவனத்துடன் நாம் கொண்டுள்ள நீண்ட கால உறவுமுறையை தொடர்ந்தும் கட்டியெழுப்பி, எமது நாட்டில் இந்த வாகனத்தை பெருமையுடனும்,நம்பிக்கையுடனும் அறிமுகம் செய்து வைப்பதுடன், இத்தகைய மகத்தான வாகனங்களை மென்மேலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதையும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். 

இலங்கைச் சந்தையில் இந்த வாகனத்தின் வெற்றிகரமான பெறுபேறுகளுக்கு எமது அதிசிறந்த DIMO  விற்பனைக்குப் பின்னரான பேணற்சேவை உதவும்,” என்று குறிப்பிட்டார்.

Revotron series இன் 1.2L Turbo charged பெட்ரோல் இயந்திரம் மற்றும் Revotorq series இன் 1.5L டீசல் இயந்திரம் என இரு புதிய

இயந்திர வடிவங்களை NEXON  கொண்டுள்ளதுடன், இந்த வாகன வகுப்பில் அதியுயர் எரிப்பொருள் சிக்கனம் மிக்க வாகனமாக 6-speed transmission இயக்கத்திற்கு வழிகோலியுள்ளது. 

இந்த வாகனப் பிரிவில் முதன்முறையான தொழில்நுட்ப சிறப்பம்சமாக NEXON மிகச் சிறந்த வகுப்பு Multi-Drive modes (Eco, City and Sport) உடனான யுஆவு வாகனத்தைச் செலுத்துபவரின் தேவைக்கேற்ப வாகனத்தின்

பெறுபேறுகள் அமையப்பெறுவதை உறுதி செய்கின்றது. விளையாட்டு ஆர்வம் கொண்டவர்களுக்கு மயிர்கூச்செறியும் அனுபவத்தை வழங்குவதற்காக 260 Nm torque (டீசல்) உடனான Sport mode,நகரச் சூழலில் வேகமாக பயணிப்பதற்கு City mode ஆகிய தொழில்நுட்பங்கள் காணப்படுகின்றன. 

100,000 கிலோ மீட்டர் பாவனை அல்லது 3 வருட பாவனை ஆகியவற்றிற்கான வழமையான உத்தரவாதத்துடன் NEXON வாகனங்கள் கிடைக்கப்பெறுகின்றன.

NEXON வாகனம் தொடர்பான மேலதிக தகவல் விபரங்களை இதனுடன் இணைக்கப்பட்டுள்ள கையேடுகள் மூலமாக அறிந்து கொள்ள முடியும் அல்லது www.tatamotors.lkwww.dimolanka.com/vehicles/tata. என்ற இணையத்தளத்தை தயவு செய்து பார்க்கவும்.

Tata Motors நிறுவனம் தொடர்பான விபரங்கள்

42 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பு வாய்ந்த ஒரு நிறுவனமான Tata Motors Limited,பயன்பாட்டு வாகனங்கள், பஸ்,டிரக் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் என உலகளாவில் முன்னிலை வகிக்கும் ஒரு மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்றது.

இந்தியாவின் மிகப் பாரிய மோட்டார் வாகன நிறுவனம் மற்றும் 100 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புவாய்ந்த Tata குழுமத்தின் அங்கம் என்ற வகையில், ஐக்கிய இராச்சியத்தில் Jaguar Land Rover மற்றும் தென்கொரியாவில் Tata Daewoo அடங்கலாக 76 துணை மற்றும் இணை நிறுவனங்களைக் கொண்ட ஒரு வலுவான சர்வதேச வலையமைப்பின் மூலமாக ஐக்கிய இராச்சியம், தென்கொரியா, தாய்லாந்து,தென்னாபிரிக்கா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் Tata Motors இயங்கி வருகின்றது. Fiat நிறுவனத்துடன் கைத்தொழில் கூட்டு வர்த்தகத்தையும் Tata Motors கொண்டுள்ளது. 

எதிர்காலத்தை நோக்கிய மற்றும் தொழில்நுட்ப சிறப்பம்சங்களைக் கொண்ட உற்பத்திகள் மீது கவனம் செலுத்தியவாறு பொறியியல் மற்றும் வாகன தீர்வுகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள Tata Motors,வர்த்தகப் பாவனை வாகனங்களைப் பொறுத்தவரையில் இந்தியாவில் சந்தையில் முன்னிலை வகித்து வருவதுடன், பிரயாணிகள் பாவனை வாகனங்களைப் பொறுத்தவரையிலும் உச்சத்தில்

திகழும் நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்ந்து வருவதுடன், இந்திய வீதிகளில் அதன் 9 மில்லியன் வாகனங்கள் தற்போது பாவனையில் உள்ளன.

நிலைபேற்றியலையும், நன்கு உகந்தவற்றையும் அடிப்படையாகக் கொண்ட வாகன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் நிறுவனத்தின் புத்தாக்க முயற்சிகள் கவனம் செலுத்தியுள்ளன. இந்தியா, ஐக்கிய இராச்சியம், இத்தாலி மற்றும் கொரியா ஆகிய நாடுகளில் அதன் வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையங்கள் அமைந்துள்ள நிலையில், அடுத்த தலைமுறை வாடிக்கையாளர்களின் கற்பனைக்குத் துளிர்விடும் புதிய முன்னோடி உற்பத்திகளை Tata Motors வெளிக்கொணர்ந்து வருகின்றது. வெளிநாடுகளைப் பொறுத்தவரையில்,

ஐரோப்பா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, தெற்காசியா, தென்கிழக்காசியா, தென் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பொதுநலவாய சுதந்திர நாடுகள் மற்றும் ரஷ்யா ஆகிய பிராந்தியங்களிலும் Tata கார்கள், பஸ் மற்றும் டிரக் வாகனங்கள் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன. 

மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள தயவு செய்து  www.tatamotors.com என்ற இணையத்தளத்தைப் பாருங்கள் அல்லது https://twitter.com/TataMotors என்ற டுவிட்டர் முகவரியின் மூலமாக எம்மோடு இணைந்திருங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58