அத்துமீறி குடியேறிய சிங்களவர்களுக்காக நீதி மன்ற உத்தரவை மீறிய மகாவலி அதிகாரசபை!!!

Published By: Digital Desk 7

22 Aug, 2018 | 04:32 PM
image

முல்லைத்தீவு - நாயாறிற்கு தெற்காக உள்ள கொக்கிளாய், கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் ஆகிய கிராமங்களில் அத்துமீறி குடியேறிய சிங்கள மக்களிற்கு நீதிமன்ற உத்தரவை மீறி மகாவலி அதிகாரசபை காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளது.

குறிப்பிட்ட பகுதியில் தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்த சிங்கள குடியேற்றவாசிகள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மீறி மகாவலி அதிகார சபை  காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளது.

மகாவலி அதிகார சபையின் இந்த திட்டமிட்ட நடவடிக்கை குறித்து அப்பகுதி மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்

1983 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் வெளியேறிய பகுதிகளில் சிங்கள மக்கள் அடாத்தாக குடியேறியதாகவும் இவ்வாறு குடியேறிய மக்கள் அந்த பகுதிகளில் வீடுகளை அமைத்து வாழ்ந்ததுடன் அவற்றிற்கு காணி உரிமை பத்திரங்களை கோரியதாகவும் இப்பகுதியின் தமிழ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் நீதிமன்றம் அவர்கள் வெளியேற வேண்டும் என தீர்ப்பளித்திருந்தது.

நீதிமன்ற உத்தரவை மீறி மகாவலி அதிகாரசபை காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளமையானது சட்டவிரோத செயல் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏறாவூர் பகுதியில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம்...

2025-03-19 11:10:32
news-image

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல்...

2025-03-19 11:07:05
news-image

நகை கடையிலிருந்து தங்கச் சங்கிலிகளை திருடிச்...

2025-03-19 11:12:28
news-image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள்...

2025-03-19 11:09:33
news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 10:35:33
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:59:36
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

2025-03-19 09:23:29
news-image

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 3...

2025-03-19 09:22:23
news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-19 09:25:20
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை...

2025-03-19 09:05:38
news-image

இன்றைய வானிலை

2025-03-19 06:23:07