அண்ணா சிலை முதல் கருணாநிதி சமாதி வரை செப்டம்பர் ஐந்தாம் திகதி நான் மேற்கொள்ளவுள்ள அமைதிப்பேரணியில்  திமுகவின் ஒரு இலட்சம் தொண்டர்கள் கலந்துகொள்வார்கள் என முக அழகிரி தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் ஐந்தாம் திகதி நான் அமைதிப்பேரணியை நடத்த உள்ளேன் என அழகிரி தெரிவித்துள்ளார்.

ஐந்தாம் திகதி அமைதிப்பேரணியில் அனைத்து மாவட்டங்களிலும் இருந்த  ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் பதவியேற்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்

இதன் மூலம் கட்சியின் தொண்டர்கள்  எனது பக்கமே உள்ளனர் என்பதை நான் நிரூபிப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனது இந்த முயற்சியின் பின்னணியில் எந்த கட்சியும் இல்லை கருணாநிதியின் இலட்சியத்தை நிறைவேற்ற நான் முயல்கின்றேன் என அழகிரி தெரிவித்துள்ளார்