ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் மத்திய அரசு விடுதலை செய்யவேண்டும் என பாமக நிறுவுனர் ராமதாஸ் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தமிழர்களிற்கு ஆதரவாக எந்த முடிவும் எடுக்கப்படக்கூடாது என்பதற்காக வழக்கு விசாரணை ஆணையத்திற்கு உள்ளே செல்கின்றது இது பெரும் அநீதி என அவர் தெரிவித்துள்ளார்.

ஏழு தமிழர்களையும் மத்திய அரசு உடனடியாக விடுதலை செய்யவேண்டும் இல்லாவிட்டால் உச்சநீதிமன்றம் தலையிட்டு முடிவெடுக்க மத்திய அரசாங்கம் அனுமதியளிக்கவேண்டும் எனவும் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய முடியாது என இந்திய மத்திய அரசு சமீபத்தில் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.