புலிப் பயங்கரவாதத்திற்கு எதிராக எப்போதும் குரல்கொடுத்தவர் : மெதமுலனயில் சுப்பிரமணியன் சுவாமிக்கு மஹிந்த புகழாரம்

Published By: Priyatharshan

22 Aug, 2018 | 12:28 PM
image

பா.ஜ.கா.வின் சிரேஸ்ட தலைவர்களில்  ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி விடுதலைப்புலிகளின்  பயங்கரவாதத்திற்கு எதிராக எப்போதும் குரல்கொடுத்தவர் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் சகோதரரின் இறுதியைகிரியைகளில் கலந்துகொள்வதற்காக  இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி மகிந்தவின் சகோதரரின் பூதவுடலுக்கும் அஞ்சலி செலுத்திய பின்னர் மாத்தறையில் உள்ள மகிந்த ராஜபக்சவின் மெதமுலன இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில்  கருத்து தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச,

சுப்பிரமணியன் சுவாமியை நான் வரவேற்றேன், புதுடில்லியில்  இடம்பெறவுள்ள நிகழ்வில் உரையாற்றுமாறு அவர் விடுத்த அழைப்பை நான் பெரும் கௌரவத்துடன் ஏற்றுக்கொண்டேன்.

சுப்பிரமணியன் சுவாமி இலங்கையின் நீண்ட கால நண்பர் என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச அவர் விடுதலைப்புலிகளின் கொடிய பயங்கரவாதத்திற்கு எதிராக எப்போதும் குரல்கொடுத்தவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சிறந்த நலன்களைப் எப்போதும் தனது இதயத்தில் வைத்திருப்பவர் சுவாமி எனவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54