யாழ்ப்­பாணம், காங்­கே­சன்­துறை பகு­தியில் இரா­ணு­வத்­திடமிருந்த ஒரு பகுதி பொதுமக்­களின் காணி­ மக்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.

காங்­கே­சன்­துறை, சந்தை வீதிக்கு அண்­மையிலுள்ள 4.5 ஏக்கர் காணியே இவ்­வாறு மீளக் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்­றைய தினம் மாலை குறித்த காணிக்­கான பத்­தி­ரங்கள் யாழ் .மாவட்ட அரச அதிபர் நாக­லிங்கம் வேத­நா­ய­க­னிடம் இரா­ணுவ தள­பதி தர்ஷன ஹெட்­டி­ய­ரச்­சியால் வழங்­கப்­பட்­டன.

குறித்த காணி­யா­னது கடந்த 27 வரு­டங்­க­ளுக்கு மேலாக இரா­ணு வத்­தி­னரின் கட்­டுப்­பாட்டில் இருந்து வந்த நிலையில் நேற்­றைய தினம் அதனை இரா­ணுவம் மீளக் கைய­ளித்­துள்­ளது.

இதே­வேளை மயி­லிட்டி துறை­மு­கத்தைச் சூழ­வுள்ள பொதுமக்களது காணிகள் மீளக் கைய­ளிக்­கப்­ப­டாமை குறித்து மக்கள் கவலை தெரிவித்துள்­ளனர்.

இப் பகு­தியைச் சேர்ந்த 1,150 குடும்­பங்கள் இன்­னமும் மீளக் குடி­ய­மர்த்­தப்­ப­டா­துள்­ளனர். ஜே–248 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 410 குடும்­பங்­களும் ஜே –246 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 666 குடும்­பங்­களும் ஜே–251 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 78 குடும்பங்களுமாக அப் பகுதிக்குரிய மக்கள் மீளக் குடியமர்த்தப்படாதுள்ளமை குறிப்பிடத்தக்கது.