இராணுவ நோக்கங்களிற்காக அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா  பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என இலங்கை ஜப்பானிடம் உறுதியளித்துள்ளது.

இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தனவை சந்தித்தவேளை அவர் இந்த வாக்குறுதியை  வழங்கியுள்ளார் என ஜப்பானின் என்எச்கே தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகம் உலகின் முக்கிய கடற்பாதையில் அமைந்துள்ளது என ஜப்பான் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சீனா தனது இராணுவநோக்கங்களிற்காக அம்பாந்தோட்டை துறைமுகத்ரதை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.