வடக்கில் தமிழ் மக்களை தூண்டி விட்டு அரசியல் செய்யும் விக்னேஸ்வரன் உடனடியாக அரசயலில் இருந்து விலக வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றது உள்நாட்டு யுத்தம் அல்ல, விடுதலைப்புலிகளை முன்னிறுத்தி இத்தியாவும், அமெரிக்காவும் இலங்கை இராணுவத்துக்கு எதிராக முன்னெடுத்த யுத்தத்தையே இராணுவம் வெற்றிக்கொண்டது.

அதனால் விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் வடக்கில் தைரியமாக அரசியல் செய்கின்றனர்.

ஜாதிக ஹெல உரிமைய கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார்.