அம்பாறை, பொத்துவில் கொட்டுக்கல் கடலில் நேற்று நீராடச்சென்ற இரு இளைஞர்களும் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு , ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது நிரம்பிய இப்றாலெப்பை முஹம்மது பஹத் மற்றும் 19 வயது நிரம்பிய றஹுமான் ராஹித் என்பவர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

பொத்துவிலுக்கு நேற்று  சுற்றுலா சென்ற இவர்கள், கொட்டுக்கல் கடலில் நீராடியவேளையில் காணாமல் போயிருந்தனர். 

இதனைத் தொடர்ந்து கடற்படையினர் மேற்கொண்ட தேடுதலின்போது இவர்களது சடலங்கள் மீட்கப்பட்டு பொத்துவில் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக பொலிஸார் தெரிவித்தனர். 

பொலிஸார், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.