இயக்குநர் சுந்தர் சி க்கு எப்போதும் விநியோகஸ்தர்கள் மற்றும் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது. 

அவரின் படங்கள் எப்போதும் கொமர்ஷலாகத்தான் அமையும். அந்த வகையில் அவர் இயக்கத்தில் வெளியான ஆம்பள படத்தில் அவர் விஷாலை வைத்து இயக்கியிருந்தார்.

தற்போது மீண்டும் விஷாலை வைத்து படம் இயக்க தீர்மானித்திருக்கிறார் சுந்தர் சி. இந்த படம் தெலுங்கு ரீமேக் படமாக இருந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவகையில் கொமடியை தூவி படமாக்கவிருக்கிறாராம் சுந்தர் சி. 

ஏற்கனவே விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் தயாரான மதகஜராஜா வெளியாகாமல் இருக்கிறது.

இந்நிலையில் சிம்புவை வைத்து சுந்தர் சி ஒரு படத்தை இயக்கவிருக்கப்பதாகவும், அந்த படத்தின் பணிகள் முடிவடைந்தபிறகு தான் விஷாலை வைத்து படத்தை இயக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.