கெகிராவ தனுசேனபுற பிரதேசத்தில்  பெண் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நிலாந்தி பாலசூரிய என்ற 35 வயதுடையது  மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கலாவேவ வைத்தியசாலையில்   வைக்கப்பட்டுள்ளது.

தற்கொலைக்கான  காரணம் தெரியாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.