(இரோஷா வேலு) 

அம்பாறையில் போலி நாணயத்தாள்களுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் நேற்று மாலை உஹண குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

உஹண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரதுவ பிரதேசத்தில் வைத்து போலி நாணயத்தாள்களுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் பண்டாரதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு யுவதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இவர்களை கைதுசெய்த வேளையில் அவர்களிடமிருந்து 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் மூன்றும் மற்றும் 1000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

உஹண பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.