உயர்தர பரீட்சை எழுதிய மாணவி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு ; முல்லைத்தீவில் சம்பவம்

Published By: R. Kalaichelvan

21 Aug, 2018 | 04:21 PM
image

உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு வீடுதிரும்பிக்கொண்டிருந்த மாணவியொருவரை வாகனமென்றில் கடத்திச்சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய சம்பவமொன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவின் பிரபல பாடசாலை ஒன்றில்  உயர்தரப் பரீட்சை எழுதிவரும் 19 வயதுடைய மாணவியை பளையைச் சேர்ந்த 22 வதுடைய இளைஞனொருவர் இளைஞர் குழுவினருடன் இணைந்து நேற்று பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியை வாகனமொன்றில் கடத்தி சென்று பளைப்பகுதியில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு இன்று உடையார் கட்டுப்பகுதியில் கொண்டுவந்து இறக்கிவிட்டுள்ளனர்.

கலைப்பிரிவில் உயர்தர பரீட்சையில் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த 19 வயதுடைய மாணவி நேற்றைய தினம் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை இளைஞர்கள் சிலர் சேர்ந்து வாகனம் ஒன்றில் குறித்த யுவதியை கடத்தி பளைப்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளார்கள் அங்கு குறித்த யுவதியின் விருப்பத்திற்கு மாறாக பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

மாணவி வீடு திரும்பாத நிலையில் நேற்றைய தினம் மாணவியின் தாயார் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் மாணவியைக் காணவில்லை என்று முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டோர் இன்று காலை குறித்த மாணவியை முல்லைத்தீவின் ஒரு இடத்தில் வாகனத்தில் கொண்டுசென்று இறக்கி விட்டுள்ளார்கள் இதையடுத்து மாணவி நடந்த சம்பவத்தினை தாயாரிடம் முறையிட்டுள்ளார்.

குறித்த மாணவியுடன் தாயார் பொபொலிஸ் நிலையம் சென்று நடந்த சம்பவத்தினை தெரியப்படுத்தியுள்ளார். இந்நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் கடத்திய இளைஞனை தேடி பளைப் பிரதேசத்திற்கு சென்று கடத்தல் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த ஒரு இளைஞனை கைதுசெய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் கைதுசெய்யப்பட்ட இளைஞனை நாளை நீதி மன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22