மோதல்கள் அற்ற ஆபிரிக்காவை உருவாக்கும் ஆபிரிக்க தலைவர்களின் மாநாடு

Published By: Priyatharshan

21 Aug, 2018 | 03:56 PM
image

முன்னாள் தென் ஆபிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலா மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் அல்பேர்டினா சிசுலு ஆகியோரின் நூறாவது ஆண்டு பிறந்த தினம் ஆகஸ்ட்  10 ஆம் திகதி அன்று இடம்பெற்றதை முன்னிட்டு மோதல்கள் அற்ற ஆபிரிக்காவை உருவாக்குவது தொடர்பில் ஆபிரிக்க தலைவர்கள் 2018 ஆபிரிக்க தலைவர்கள் சமாதான மாநாடு ஒன்றை ஹில்டன் ஹோட்டலில் ஜொஹன்னஸ்பர்க் தென் ஆபிரிக்காவில் நடத்தினார்கள். 

மோதல்கள் அற்ற ஆபிரிக்காவை உருவாக்குவது தொடர்பில் மாநாட்டில் கலந்துரையாடப்பட்டது. மொஸாம்பிக்கின் முன்னாள் ஜனாதிபதி மடகஸ்கரின் தேசிய சபையின் சபாநாயகர் பாவோகெங் நாட்டின் மகாராணி, சுவதினி நாட்டின் இளவரசர் துணை சபாநாயகர்கள் ஆபிரிக்க முன்னாள் துணை ஜனாதிபதிகள் உட்ட பலர் கலந்துகொண்டனர். 

இம்மாநாட்டிற்கு ஆபிரிக்க சமாதானத்துக்கான தலைவர்களின் செயற்பாட்டுக் குழு சொர்க்க கலாசாரம், உலக அமைதி மற்றும் ஒளியை நிலை நிறுத்தல் (HWPL) சர்வதேச பெண்கள் சமாதானக்குழு, சர்வதேச சமாதான இளைஞர் குழு என்பன அனுசரணை வழங்கியிருந்தன. ஆபிரிக்க தலைவர்களின் சமாதானம் மற்றும் பாதுகாப்பு செயற்பாடும் ஆபிரிக்காவின் 2063 நிகழ்ச்சி நிரல் அமுலாக்கம் என்பன குறித்து மீளாய்வு செய்யப்பட்டன. 

சிம்பாப்வே நிலவரம் குறித்தும் ஆபிரிக்காவில் ஆண் மற்றும் பெண் தொடர்பில் கல்வி வேலைவாய்ப்பில் பாரபட்சம் குறித்தும் இம்மாநாட்டில் எடுத்துக் கூறப்பட்டது.

இன்று உலகில் யுத்த நிறுத்தம் பரவலாகப் பேசப்படுகிறது. இன்று அனைவரும் நாடுவது சமாதானத்தையே அன்றி யுத்தத்தையல்ல. சமாதானக் கல்வியை எமது சிறுவர்கள் பெறுவதுடன் சமாதான கலாசாரத்தை சிறுவர்களுக்காக உருவாக்க ணே்டியுள்ளது என மொசாம்பிக்கின் முன்னாள் ஜனாதிபதி இம்மாநாட்டில் குறிப்பிட்டார். 

சமாதான பிரகடனம் மற்றும் யுத்த நிறுத்தத்தின் மூலம் உலகில் பரவலாக அமைதியைக் கட்டியெழுப்ப முடியும். எதிர்கால சந்ததிக்காக மட்டுமல்ல, தற்போதைய சந்ததிக்குமாக உலகில் சமாதானம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என மொஸாம்பிக்கின் தேசிய சபையின் ஜனாதிபதி வெரோனிக்கா நாடனீல் மஹமு தெரிவித்தார்.

நான் சமாதானத்தின் செயற்பாடு குறித்து உரையாற்ற ஆபிரிக்கா வந்துள்ளேன். சமாதானத்துக்காக உலகில் பாரிய எண்ணிக்கையானோர் செயற்பட்டுள்ளனர். ஆனால் இப்புவியில் சமாதானம் எந்த மட்டத்திலுள்ளது? பூமியில் யுத்தத்தை நிறுத்தி சமாதானத்தை கட்டியெழுப்புவதை தவிர பெரிதாக வேறொன்றும் ஆற்ற முடியாத என இம்மாநாட்டிற்கு முக்கியமாக அனுசரணை புரியும் சர்வதேச தொண்டு நிறுவனமான (HWPL) அமைப்பின் தலைவர் மான் ஹி லி இம்மாநாட்டின்போது தெரிவித்தார். 

சுவாதினி நாட்டின் மன்னர் சார்பாக அந்நாட்டின் இளவரசர் ஹலாகு சென்பி பங்கேற்று உரையாற்றினார். இம்மாநாட்டின் நிகழ்ச்சிகள் யாவும் தென் ஆபிரிக்காவில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04