கொழும்பு நகரமண்டப சுற்றுவட்டப் பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு நகர மண்டபப் பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுகின்றது.

இந்நிலையில் உயர் கல்வி அமைச்சுக்கு முன்னால் கூடியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க கலகமடக்கும் பொலிஸார் அப்பகுதியில் குவிக்கப்படடுள்ளதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைக்குண்டு மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.