இலங்­கையின் மலிந்த யாப்பா மற்றும் அசங்க பிரதீப் குமார ஜோடியானது தென் கொரியாவின் கிம் ஜுங்யங் மற்றும் கிம் ஹொங்சங் ஜோடியை 2-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்­தி­யது.இதன்­மூலம் ஆரம்பச் சுற்றில் "பி" குழுவில் ஆடும் இலங்கை கடற்­கரை கரப்­பந்­தாட்ட அணி அந்த குழுவில் மொத்தம் 3 புள்­ளி­களைப் பெற்று முத­லி­டத்தைப் பெற்­றுள்­ளது.

இந் நிலையில் இந்த ஜோடி நேற்­று­ முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற முத­லா­வது போட்­டியில் நடப்பு சம்பியனான கஸகஸ்தானிடம் தோல்வியைத் தழுவியிருந்தது.

ஆனாலும் புள்ளிகளைப் பெற்றதன் அடிப்படையிலும் நேற்றைய வெற்றியின் மூலமும் புள்ளிகள் பட்டியலில் முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.