சென்னையில் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதியன்று கலைஞர் நினைவிடத்தை நோக்கி நடைபெறும் அமைதி பேரணியில் என் பலத்தை நிரூபித்து காட்டுவேன் என்று மறைந்த தி.மு.க.தலைவர் கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

‘செப்டெம்பர் 5 ஆம் திகதியன்று கருணாநிதியின் நினைவிடத்தை நோக்கி அமைதி பேரணி நடைபெறுகிறது.

அதில் 75 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரையிலானவர்கள் கலந்து கொள்வார்கள். எமக்கு பின்னால் பா.ஜ.க. இருப்பதாக சொல்லும் குற்றச்சாட்டு குறித்து நான் இதுவரை கேள்விபடவேயில்லை.

கருணாநிதி என்ன நினைத்தாரோ அதன் படி செயற்படுவேன். அவர் என்னிடம் கடைசியாக சொன்ன வார்த்தைகள் இருக்கின்றன. அதை வெளியில் சொல்லமுடியாது.

கருணாநிதியின் உண்மையான தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர். அதை செப்டெம்பர் 5 ஆம் திகதியன்று நடைபெறும் பேரணியில் நிரூபித்து காட்டுவேன். அதற்கு பிறகும் எதிர்காலத்திலும் என் பலத்தை நிரூபித்து காட்டுவேன்.’ என்றார்.