இந்தியாவின் , கேரள மாநிலத்தில் பெய்த கடும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.

அவ்வகையில் தற்போது வெள்ள நீர் வடிந்தோடிய பின் மக்கள் அவர்களின் இயல்பு நிலையை தொடங்குவதற்கு தத்தமது குடியிருப்புகளை சுத்தம் செய்து வருகின்றனர்.

எனினும் குறித்த பாதிப்புக்குள்ளான மக்களின் வீடுகளில் பாம்புகள் படையெடுத்து அங்கு குடி கொண்டுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கழிவுகள் நிறைந்து வீடுகள் காணப்படுகின்றமையினால் தமது குழந்கைளை வைத்துக்கொண்டு சுத்தம் செய்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கேரள மக்கள் தெரிவிக்கின்ற நிலையில், இவ்வாறு விசப் பாம்புகள் அனைத்தும் வீட்டுக்குள் படையெடுத்துள்ளமையால் மக்கள் வீடுகளை சுத்தம் செய்வதிலும் பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.