பேண்தகு தொலைநோக்கு முதலாவது வரைவினை போஷிக்கவும் பேண்தகு தொலைநோக்கினை நடைமுறைப்படுத்தும் போது கவனம் செலுத்தப்பட வேண்டிய பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் சகல பல்கலைக்கழகங்களும் உள்ளடக் கப்படும் வகையில் இடம்பெறவுள்ள கலந்துரையாடல் தொடரின் முதலாவது கலந்துரையாடல் நேற்று முற்பகல் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் லக்ஷ்மன் திசாநாயக்க, பேண்தகு அபிவிருத்தி பற்றிய ஜனாதிபதி விசேட நிபுணர் குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் முனசிங்க, பேண்தகு அபிவிருத்தி பற்றிய ஜனாதிபதி விசேட நிபுணர் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் சிறி ஹெட்டிகே, ஜனாதிபதி செயலகத்தின் ஆராய்ச்சி மற்றும் சர்வதேச ஊடகப்பிரிவின் பணிப்பாளர் ஹரீந்ர பீ. தசநாயக்க, பேண்தகு அபிவிருத்தி பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திசுரி வன்னிஆராச்சி மற்றும் பல்கலைக்கழகத்தின் பல்வேறுதுறை சார்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோர் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.