அவுஸ்திரேலிய லிபரல் கட்சியின் தலைவர் யார் என்பதை உறுதிசெய்வதற்காக இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் மல்கம் டேர்ன்புல் வெற்றிபெற்றுள்ளார்.

பிரதமர் மல்கம் டேர்ன்புல் அவரது உள்துறை அமைச்சரை தோற்கடித்து கட்சியின் தலைமைத்துவத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

லிபரல் கட்சியின் தலைமத்துவத்திற்கு எதிராக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர் அமைச்சர் பீட்டது டட்டனை கட்சியின் தலைவராக நியமிக்குமாறு கோரிக்கைகள் காணப்படுகின்றன என வெளியான தகவல்களின் மத்தியிலேயே இந்த வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது.

தனது தலைமைத்துவத்திற்கு ஆபத்து என வெளியான தகவல்கள் பொய்யானவை என நிரூபிப்தற்காக பிரதமேர இந்த வாக்கெடுப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

கான்பெராவில் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் உள்துறை அமைச்சரை 48-35 என்ற அடிப்படையில் தோற்கடித்தார்.

இதன் பின்னர் கருத்து தெரிவித்துள்ள மல்கம் டேர்ன்புல் கட்சியில் ஐக்கியம் நிலவவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

நாங்கள் எங்கள் மத்தியிலான வேறுபாடுகளை கைவிட்டுவிட்டு அவுஸ்திரேலிய மக்களின் நலன்களை உறுதிசெய்யும் முக்கிய கடமையில் ஈடுபடவேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.