‘வயது 60 மாநிறம் ’ 

Published By: Daya

21 Aug, 2018 | 11:05 AM
image

‘வயது 60 மாநிறம் ’ ஓடியோ வெளியீடு விழா இன்று.

தேடல் பற்றிய படமே வயது 60 மாநிறம் என்று அப்பட நாயகனான பிரகாஷ்ராஜ் தெரிவித்திருக்கிறார்.

கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் வயது 60 மாநிறம். இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இந்துஜா, குமரவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வசனங்களை இயக்குநர் விஜி எழுத, திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் ராதாமோகன். இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் ஓடியோ வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் பிரகாஷ்ராஜ், தயாரிப்பாளர் எஸ்.தாணு, இயக்குநர் ராதாமோகன், நாயகன் விக்ரம்பிரபு, நாயகி இந்துஜா, ஒளிப்பதிவாளர் விவேக், கலை இயக்குநர் கதிர், நடிகர் குமரவேல் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர்.

குறித்த நிகழ்வில் நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்ததாவது,

‘ குறித்த படத்தின் கதையை நான் கன்னடத்தில் படமாக உருவாகும் முன்னரே கேட்டிருக்கிறேன். அத்துடன் வெளியாகும் முன்னரே இந்த கதையின் வீரியம் புரிந்து உரிமையை வாங்கிவிட்டேன்.

அதன் பிறகு இயக்குநர் ராதாமோகன், விஜி உள்ளிட்ட எம்முடைய நண்பர்களிடம் விளக்கினேன். தேடல் பற்றிய இந்த படத்தில் வசனக்கர்த்தா விஜி இரண்டு இடங்களில்  பளிச்சென்று வசனம் எழுதியிருக்கிறார்.

இதுவே இப்படத்தைப் புரிந்துகொள்வதற்கு எளிதாக இருக்கும். இந்த படத்திற்கு நான் பின்னணி பேசும் முன்பே இசைஞானி பின்னணி இசையமைத்துவிட்டார். அதன் பிறகு ஒரு நாள் திருவண்ணாமலையில் இருந்து ஒரு குறிப்பிட்ட காட்சியில் ஒரு குறிப்பிட்ட வசனத்தை இப்படித்தான் நீங்கள் உச்சரிக்கவேண்டும்.  அது தான் பொருத்தமாக இருக்கும்.

அதற்கு தான் நான் பின்னணி இசையமைத்திருக்கிறேன் என்று சொல்லும் போது, இத்தனை உயரத்திற்கு சென்றபோதும் அவரின் ஈடுபாடு குறித்து ஆச்சரியமடைந்தேன்.’ என்றார் பிரகாஷ் ராஜ்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right