கிளிநொச்சி - ஆனையிறவு - நாவல் கொட்டியான் ஆகிய பிரதேசங்களுக்கான குறுந்தூர போக்குவரத்துச்சேவைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி ஏ-9 வீதியின் திருமுறிகண்டி முதல் ஆறையிறவு வரைக்குமான பகுதிகளுக்கான குறுந்தூர பஸ் சேவை நடத்தப்படவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரியுள்ளனர்.

அதாவது திருமுறிகண்டி முதல் பரந்தன் வரைக்குமான குறுந்தூர சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றபோதும், ஆனையிறவு நாவல் கொட்டியான் உமையாள்புரம் வரைக்குமான சேவைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால் குறித்த பிரதேச மக்கள் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அதாவது ஏ-9 வீதியூடாக வவுனியா யாழ்ப்பாணத்திற்கான பஸ் சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றபோதும் உமையாள்புரம் ஆனையிறவு தட்டுவன்கொட்டி நாவல் கொட்டியான் பகுதியிலிருந்து செல்லும் பயணிகளை பஸ்களில் ஏற்றிச்செல்வதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ள பிரதேச மக்கள் ஆனையிறவு பரந்தன் திருமுறிகண்டி வரைக்குமான பஸ் சேவைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.