விஸ்வமடு புன்னைனிராவிப் பகுதியில் இனந்தெரியாத நபர்கள் இன்று பிற்பகல் வைத்த தீயினால் சுமார் முப்பதிற்கும் மேற்ப்பட்ட பனைமரங்கள் மற்றும் ஆறுக்கும் மேற்ப்பட்ட தென்னை மரங்கள்  எரிந்து நாசமாகியுள்ளன.

எனினும் அப்பகுதி இளைஞர்கள் மக்கள் ஒன்று சேர்ந்து தீப்பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமையினால் பயந்தரு மரங்கள் பல காப்பாற்றப் பட்டுள்ளது 

சம்பவ இடத்திற்கு சென்ற தர்மபுரம் பொலிஸார் தீவைத்தவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னேடுத்துள்ளனர்.