கேப்பாபுலவு நிலம் மீட்பு போராட்டத்தை தொடக்கிவைத்த ஆறுமுகம் வேலாயுத பிள்ளையை போராட்டத்தில் இருந்து ஒதுக்கிவிட்டார்கள்?

கேப்பாபுலவு போராட்டத்தை தொடக்கி தொடச்சியாக நடத்திவந்த  ஆறுமுகம் வேலாயுதபிள்ளை அவர்கள் இன்று வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய முன்னறலில் அறவளி போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

ஆலய முன்றலில் அம்மனை வழிபட்டவாறு கருத்துதெரிவித்த அவர் போராட்டத்தினை நடத்தியவர்கள் தன்னை புறம்தள்ளிவிட்டுள்ளதாக காணிவிடுவிப்பிற்காக ஆலய வழிபாட்டிற்கு கதிர்காமம் யாத்திரை சென்றவேளை போராட்டத்தின் கணக்கு அறிக்கைகள் மற்றும் காணி விபரங்கள் அடங்கிய ஆவணங்களை ஒப்படைத்த நபர் அதனை மீள தரமறுத்துவிட்டு தன்னை ஒதுக்கிவிட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

போராட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டு தங்களின் வாழ்விடங்கள் விடுவிக்கும்வவரை போராட்டத்தில் தன் பங்களிப்பு இருக்ககூடாது என்று சிலர் தன்னை ஒதுக்கிவிட்டுள்ளதாக வற்றாப்பளை கண்ணகை அம்மனின் மேல் தன் ஆதங்கத்தினை தெரிவித்து ஆலய முன்றலில் போராட்டத்தை நடத்தியுள்ளார் .