ஸ்பெயினில் பொலிஸ்நிலையத்திற்குள் கத்தியுடன் நுழைந்து தாக்குதலை மேற்கொள்ள முயன்ற நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்

கட்டலோனியாவின் கோர்னெலாவில் உள்ள பொலிஸ் நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதிகாரிகள் இது பயங்கரவாத தாக்குதல் முயற்சியாகயிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

கோர்னெலாவில் வசித்து வந்த அல்ஜீரிய பிரஜையே பொலிஸ் நிலையத்திற்குள் கத்தியுடன் நுழைந்து தாக்குதலை மேற்கொள்ள முயன்றார் என பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட நபர் பொலிஸ்நிலையத்திற்குள் நுழைந்தவவுடன் அல்லாகு அக்பர் என கோசமிட்டார் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் முயற்சி என கருதுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக குறிப்பிட்ட பொலிஸ்நிலையத்தை சுற்றிவளைத்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சுட்டுக்கொல்லப்பட்ட நபரின் உடலை அகற்றியுள்ளனர்.

மேலும் பொலிஸ் நிலையத்திலிருந்து அருகில் உள்ள சந்தேகநபரின் வீட்டையும் காவல்துறையினர் சோதனையிட்டுள்ளனர்.

கடந்த வருடம் கட்டலோனியாவில் ஆகஸ்ட் 17 ம் திகதி பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்ற நிலையிலேயே இன்றும் அதுபோன்றதொரு முயற்சி இடம்பெற்றுள்ளது.

கடந்த வருடம் ஆகஸ்ட் 17 ம் திகதி இடம்பெற்ற வான் தாக்குதல் மற்றும் கத்திக்குத்து சம்பவங்களில் 16 பேர் கொல்லப்பட்டனர். ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதல்களிற்கு உரிமை கோரியிருந்தது.