பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கானுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டுடன் அர்த்தமுள்ள ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் 22 ஆவது பிரதமராக அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் இம்ரான் கான் கடந்த 17 ஆம் திகதி பதவியேற்றார். அவரது தலைமையில் 21 அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களில் 16 அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கானுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.
அண்டைநாடான பாகிஸ்தானுடன் அமைதிப்பாதையிலான நல்லுறவை இந்தியா விரும்புவதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மோடி, தெற்காசிய கண்டத்தை பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து விடுவித்தாக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பாகிஸ்தானுடன் அர்த்தமுள்ள ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு இந்தியா தயாராக உள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM