முச்சக்கர வண்டிகளுக்கான ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவொன்று நிறுவப்படுமென நிதியமைச்சரும் ஊடகத்துறை அமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முச்சக்கர வண்டிகளுக்கான வரைவு தீர்வுத் திட்டம் ஒன்றும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.