கிறிஸ்ப்றோ 100 வீத சுற்றாடலுக்கு சார்பான (Go Green) செயற்பாடு ஊடாக தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. 

அதற்கமைய கிறிஸ்ப்றோ குழுமத்துக்கு 50 ஆண்டுகள் பூர்த்தியாகும் 2022 இன் போது முழுமையாக சுற்றாடலுக்கு சார்பான நிறுவன குழுமமாக செயற்படவுள்ளது.

கிறிஸ்ப்றோ உற்பத்தி செயற்பாடுகளின் பெரும்பாலானவை தற்போதே சூழலுக்கு தீங்கிழைக்காத வகையில் முன்னெடுக்கப்படுகின்றது. 

இதுதவிர எரிபொருள் பாதுகாப்பு, சூழல் மாசுபடுவதை குறைத்தல்ரூபவ் பொருளாதார நிலைத்தன்மை ஆகியன தொடர்பிலும் கவனம் செலுத்துகின்றது. “பண்ணையிலிருந்து கரண்டி வரை” (Farm to Fork) என்ற நிறுவன தலைவரின் எண்ணத்துக்கமைய கிறிஸ்ப்றோ இலங்கையிலுள்ள கோழி இறைச்சி உற்பத்தி நிறுவனங்களுக்கிடையில் 100 வீத சுற்றாடலுக்கு தீங்கிழைக்காத உற்பத்திகளை ஆரம்பித்த முதலாவது நிறுவனமாகும். 

சிறு மற்றும் நடுத்தர கோழி பண்ணையாளர்களை இணைத்துக்கொண்டுள்ள நிறுவனம் இயற்கை உற்பத்திகளை மேற்கொள்கின்றது.

வளங்களின் நிலையான பயன்பாட்டின் ஊடாக சுற்றாடல் தீங்குக்கான அழுத்தத்தை குறைத்தலே வியாபார வெற்றியின் பிரதான காரணி என கிறிஸ்ப்றோ நிறுவனத்தின் சிரேஷ்ட சந்தைப்படுத்தல் முகாமையாளர் அமோரிஸ் செலர் குறிப்பிட்டார். 

கோழி உற்பத்தி துறையிலுள்ள பிரதான சவாலான கழிவுகளை உரிய முறையில் அகற்றுதல் மற்றும் எரிபொருள் பயன்பாடு தொடர்பாக பொறுப்புடனும் நிதி சார்ந்த உரிய தீர்வுகளை முன்வைப்பதே தமது நிறுவனம் நோக்கம் என கூறிய அவர், கோழி உற்பத்தி துறையில் ISO 41001 தரச் சான்றிதழுடன் மேலும் 6 சான்றிதழ்களை கொண்ட ஒரே நிறுவனம் கிறிஸ்ப்றோ ஆகும் என்றும் சுகாதாரம், உயர்தர உற்பத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் கூறினார்.

கோழி பண்ணையில் நாளாந்தம் சேரும் கோழி கழிவுகளையும் (Chicken litter) மற்றும் கோழியின் தேவையற்ற பாகங்களையும் (Unwanted chicken parts) சூழலுக்கு தீங்கிழைக்கத வகையில் அப்புறப்படுத்துவதே பிரதான பிரச்சினைகளாகும். அதனை சிறப்பாக எதிர்கொண்ட கிறிஸ்ப்றோ மீள் சுழற்சி செய்து மீண்டும் பாவனைக்கு எடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கோழியின் சரீர பாகங்களை கோழியின் தீவனத்துக்காக பயன்படுத்துகின்றது.

கோழி கழிவுகளை பயன்படுத்தி மாற்று எரிசக்தி (Chicken Briquettes) உற்பத்தி செய்யும் செயற்திட்டத்தை அடுத்தாண்டு ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளமைக்கு காரணம் சுற்றாடலுக்கு ஏற்படும் தீங்கை தவிர்க்கவே. கிறிஸ்ப்றோ நிறுவனத்துக்குரிய போர்ச்சூன் அக்ரோ இன்டஸ்ட்ரீஸ் (தனியார்) நிறுவனம் கோழி உணவு உற்பத்திக்கு பயன்படுத்தும் கொதிகலனை எரியூட்டும் நடவடிக்கைகளுக்கு கோழி கழிவுகளை பயன்படுத்த எதிர்பார்த்துள்ளது.

சுற்றாடலுக்கு சார்பான எரிபொருள் பயன்படுத்தி கோழி உணவு உற்பத்திகளை தயாரிக்கும் இலங்கையின் முதல் நிறுவனம் போர்ச்சூன் அக்ரோ இன்டஸ்ட்ரீஸ் (தனியார்) நிறுவனம் ஆகும்.

சுற்றாடலை நேசித்து தமது தொழிலை செய்வதற்காக ஊழியர்களை ஊக்குவிக்கும் முகமாக கிறிஸ்ப்றோ “பசுமை விருது” என்ற பெயரில் ஒவ்வொரு வருடமும் சுற்றாடலுக்கு தீங்கிழைக்காத கிறிஸ்ப்றோ கோழி பண்ணை ஒன்றுக்கு விருது வழங்க இவ்வருடம் கிறிஸ்ப்றோ முகாமைத்துவம் நடவடிக்கை எடுத்தது.

அதற்கமைய எரிசக்தி பாதுகாப்பு மற்றும் சூழல் மாசுபடுவதை குறைத்தல் போன்றவற்றுக்காக பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ள நிறுவனம் ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்களது பொருளாதார நிலைத்தன்மையை பேணுவதற்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கின்றது.

அதற்கமைய நிறுவன சமூக கூட்டாண்மை பொறுப்புக்கள் பலவற்றை முன்னெடுத்துள்ளதுடன் “சிசு திரிய” செயற்திட்டத்தின் கீழ் கிறிஸ்ப்றோ நிறுவன ஊழியர்களது பிள்ளைகளுக்கு புலலைப் பரிசல்கள் வழங்கல், பரீட்சைகளில் சித்தியடையும் மாணவர்களை கௌரவித்தல், பாடசாலை புத்தகங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை வழங்கல் அவற்றில் அடங்குகின்றன. கிறிஸ்ப்றோ உடன் பணியாற்றும் விவசாயிகள் மற்றும் வேலை இடங்களுக்கு அண்மித்த பகுதிகளிலுள்ள மக்களது பிள்ளைகளுக்கு தொழிற் பயிற்சிகள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு கல்வி செயற்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது.

“பிரஜா அருண” செயற்திட்டத்தின் கீழ் கிறிஸ்ப்றோ ஊழியர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுத்தல் மற்றும் புதுப்பித்தல் போன்றன செய்யப்படுகின்றன. கிராம மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளுக்கான நிதிப் பங்களிப்பு வழங்குகின்றது. “திரி சவிய” செயற்திட்டத்தின் கீழ் கிறிஸ்ப்றோ நிறுவனத்தின் பணியாற்றும் சிறு மற்றும் நடுத்தர கோழி வளர்ப்பு வர்த்தகர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கி, முகாமைத்துவ அறிவு, தொழில்நுட்ப அறிவு, கடன் வசதிகள் மற்றும் கோழி தீவனங்களையும் வழங்குகின்றது. அதற்கமைய இலாபத்தில் ஒரு பங்கும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றது. “சுவ சக்தி” செயற்திட்டத்தின் கீழ் கிறிஸ்ப்றோ ஊழியர்களது ஆரோக்கியத்தை மேம்படுத்த சுகாதார அனுகூலங்களை வழங்குதல் மற்றும் மருத்துவ முகாம்களை நடத்துதல் போன்றவற்றுடன் கிராமிய வைத்தியசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலும் இடம்பெறுகின்றது.

“Crysbro Next Champ” செயற்திட்டம் ஊடாக எதிர்கால உலகை வெல்லக்கூடிய எமது நாட்டின் திறமையான இளம் விளையாட்டு வீர வீராங்கனைளை அறிமுகப்பபடுத்தலும் அவர்களுக்காக தேசிய மட்டத்திலான விருது விழாவையும் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

இற்றைக்கு 46 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட கிறிஸ்ப்றோ நிறுவனத்தில் இன்று 1,100 இற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 6 நிறுவனங்களை கொண்ட ஒரு பாரிய குழுமமாக உள்ளது. நாடு முழுவதும் 17 இடங்களில் தமது உற்பத்திளை மேற்கொள்ளும் இலங்கையின் பெரிய கோழி உற்பத்தி குழுமம் கிறிஸ்ப்றோ வர்த்த நாமத்தின் கீழ் 39 வகையான உற்பத்திகள் சந்தையில் உள்ளன. உலகின் உயர்தர தொழில்நுட்பங்களை பயன்படுத்தி முழுமையான உற்பத்தி செயற்பாடுகளை கணினி மயப்படுத்தி உயர்தரம், புத்துணர்வு, போஷாக்கு மற்றும் ஆரோக்கியம் தொடர்பாக அதிக கவனம் செலுத்தியே தமது உற்பத்திகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.