நாட்டில் உருவெடுத்துள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அவற்றை வழிநடத்துவதற்கும் உரிய நபர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே ஆவார். எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சி நிர்வாகத்தை ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

அத்துடன் நான் அரசியலிலிருந்து விலகப் போவதில்லை. நடந்து முடிந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தால் நிச்சயம் நானே வெற்றிபெற்றிருப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் உருவெடுத்துள்ள பிரச்சினை களை தீர்ப்பதற்கும் அவற்றை வழிநடத்து

வதற்கும் உரிய நபர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே ஆவார்.எனவே நாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டுமாயின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சி நிர்வாக பொறுப்பை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்க வேண்டும். அப்போதுதான் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க முடியும். அதற்கான ஆற்றலும் திறமையும் அவரிடம் உள்ளது.

அத்துடன் நடந்து முடிந்த தேர்தலின் போது நான் தோற்கவில்லை. நான் தேர்த லில் போட்டியிட்டிருந்தால் நிச்சயமாக வெற்றிபெற்றிருப்பேன்.

தற்போது அனைவரும் சண்டித்தனம் காண்பிக்கின்றனர். இவர்களை கட்டுப்படுத்துவதற்கு எனக்கு அமைச்சு பதவியே தேவையில்லை. எனக்கு அனுமதி தந்தால் தனி ஒருவனாக இருந்து அவர்களை கட்டுப்படுத்திக் காட்டுவேன் என்றார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் அவர் பாடல்கள் பாடி அதற்கான விளக்கத்தையும் தந்தார்.