உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்­களை தாம­திக்கும் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளுக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்­கி­யுள்­ளது. அதா­வது கூட்­ட­மைப்­பினர் தற்­போது ஜன­நா­யக விரோத செயற்­பா­டு­க­ளுக்கும் துணை போக ஆரம்­பித்­துள்­ளனர் என்று ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார்.

நாட்டில் இடம்­பெறும் நிகழ்­வு­களில் எதிர்க்­கட்­சிக்கு முக்­கிய வகி­பாகம் இருக்­கின்­றது என்­ப­தனை எதிர்க்­கட்சித் தலைவர் உணர்ந்­து­கொள்­ள­வேண்டும். மாறாக எமக்கு தரு­வதை தந்­து­விட்டு உங்­க­ளுக்கு தேவை­யா­னதை செய்­யுங்கள் என்ற போக்கில் எதிர்க்­கட்­சி­யான தமிழ்க் கூட்­ட­மைப்பு செயற்­பட முடி­யாது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

நாட்டின் தற்­போ­தைய அர­சியல் நிலை­மைகள் குறித்து விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஷ் குண­வர்த்­தன மேலும் குறிப்­பி­டு­கையில்,

நாடு பொரு­ளா­தார ரீதியில் மிகவும் கீழ்மட்­டத்­திற்கு சென்று கொண்­டி­ருக்­கின்­றது. பொரு­ளா­தாரம் மற்றும் நிதி நெருக்­கடி அர­சாங்­கத்தை ஆட்­டிப்­ப­டை­கின்­றது என்றே கூற­மு­டியும். குறிப்­பாக நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள இந்த பொரு­ளா­தார நிலைமை குறித்து நாட்டின் எதி­ர்க்கட்சித் தலைவர் சிந்­திக்க வேண்டும்.

இந்த விட­யத்தில் எதிர்­க்கட்­சி­யான தமக்கு பாரி­ய­தொரு பொறுப்பு இருக்­கின்­றது என்­பதை எதிர்க்­கட்சி உணர்ந்து கொள்ள வேண்டும். அத­னை­வி­டுத்து எமக்கு தரு­வதை தந்­து­விட்டு உங்­க­ளுக்கு தேவை­யா­னதை செய்­யுங்கள் என்ற போக்கில் எதிர்க்­கட்சி செயற்­பட முடி­யாது.

இத­னை­வி­டுத்து உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்கள் தாம­திக்­கப்­ப­டு­வ­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்­கி­யுள்­ளது.

அதா­வது கூட்­ட­மைப்­பினர் தற்­போது ஜன­நா­யக விரோத செயற்­பா­டு­க­ளுக்கும் துணை போக ஆரம்­பித்­துள்­ளனர். வடக்கு, கிழக்கில் உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் சிறப்­பாக செயற்­பட வேண்­டி­யுள்­ளது. ஆனால் அவ்­வாறு உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் செயற்­ப­டாமல் இருப்­ப­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்­கி­யி­ருக்­கின்­றது. இது கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.

இது இவ்­வா­றி­ருக்க இந்­தியா இலங்­கையில் அதி­காரப் பகிர்வு முறை மேற்­கொள்­வ­தற்கு அழுத்தம் வெளியிட வேண்டும் என வட­மா­கா­ண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­கி­னேஸ்­வரன் கூறி­யி­ருக்­கிறார். மாகாண சபை ஒன்றின் முத­ல­மைச்சர் இவ்­வாறு வேறு நாடு ஒன்­றிடம் அதி­காரப் பகிர்­வினை முன்­னெ­டுக்க உத­வு­மாறு கோரிக்கை விடுக்க முடி­யாது. இது நாட்டின் அர­சி­ய­ல­மைப்பை மீறும் செயற்­பா­டாகும். அதி­கா­ரத்தை பகி­ரு­மாறு முத­ல­மைச்சர் அர­சாங்­கத்­திடம் கோரலாம். மாறாக வெ ளிநாட்­டிடம் கோரிக்கை விட முடி­யாது.

வடக்கு முத­ல­மைச்சர் தற்­போது பிர­பலம் இல்­லாத அர­சியல் வாதி­யா­கி­யுள்ளார். அதனால் அவர் பிரபல்யம் அடைவதற்கு இவ்வாறான விடயங்களை தெரிவித்து வருகிறார்.

மேலும் இந்திய மீனவர்கள் எமது நாட்டின் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் கடல் வளத்தை அழித்து வருகின்றனர். அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் அரசாங்கம் இருந்துவருகின்றது என்றார்.