இந்தோனேசியாவின் ஆரம்பபாடசாலை மாணவிகள் ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர்கள் போன்று ஆடைகளை அணிந்து கையில் பொம்மை துப்பாக்கியுடன் சுதந்திர தின அணிவகுப்பில் கலந்துகொள்ள செய்யப்பட்ட  சம்பவத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

கிழக்கு ஜாவாவில் உள்ள புரொபொலிங்கோ நகரில் உள்ள டீகே கர்டிகா சிறுவர் பாடசாலையின் மாணவிகளிற்கு அந்த பாடசாலையின் ஆசிரியர்கள் ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர்கள் போன்ற உடைகளை வழங்கி கையில் பொம்மை துப்பாக்கிகளையும் வழங்கி சுதந்திர தின அணி வகுப்பில் கலந்துகொள்ள செய்துள்ளனர்.

இந்த அணி வகுப்பு குறித்த படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன.

இந்தோனேசியாவில்  ஆசிய விளையாட்டுப்போட்டிகளின் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்ற தினத்தில் இந்த படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானது இந்தோனோசிய அரசாங்கத்திற்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசிய நாடாளுன்ற சபாநாயகர் இது பொருத்தமற்ற நிகழ்வு என விமர்சித்துள்ளார்.

சிறுவர்களை முகத்தை கறுப்புதுணியால் முகத்தை மறைக்குமாறு உத்தரவிடுவதும் பொம்மை துப்பாக்கிகளை அவர்கள் கைகளில் கொடுப்பதும் சிறுவர்களின் எண்ணங்களில் தாக்கத்தை செலுத்திவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து குறிப்பிட்ட ஆரம்ப பாடசாலையின் தலைவர் இதற்காக மன்னிப்பு கோரியுள்ளாh. சிறுவர்களின் மனதில் வன்முறையை விதைக்க முயலவில்லை எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.

அல்லா மீதான விசுவாசத்தை அதிகரிப்பதற்காகவே நாங்கள் இதனை செய்தோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்