கண்டி, பேராதனை பல்கலைகழகப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேராதனைப் பல்கலைகழகத்திற்கு அருகிலுள்ள கலஹா வீதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் 36 மற்றும் 37 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.