எகிப்திய சமாதி ஒன்றை ஆய்வு செய்யும் போது  தொல்பொருள் ஆய்வாளர்களால் குறித்த பாலாடை கட்டி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டுப்பிடிக்கப்பட்ட பாலாடை கட்டியானது எகிப்திய கல்லறை ஒன்றை ஆராய்ச்சி செய்யும் போதே ஆரய்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய பாலாடைக் கட்டி படிமங்களில் இதுவே மிகவும் பழமை வாய்ந்ததாக தெரிவித்துள்ளனர். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எகிப்திய உயரதிகாரியான தஹ்மெஸின் கல்லறையில் சில உடைந்த ஜாடிகளை கண்டுபிடித்ததாக தெரிவித்தனர்.

குறித்த சமாதியில் இறுக்கமான வெள்ளை திண்மப் பொருளொன்று இருந்ததகாவும் அதனை ஆய்வு செய்ததில் பாலாடைக் கட்டியானது சுமார் 3200 ஆண்டுக்களுக்கு முன்பு பயன்படுத்திய பாலாடைக் கட்டி என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.