தெரு நாய் ஒன்று தனது குட்டிகளை காப்பற்றுவதற்காக போராடிய சம்பவம் மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் நொய்யல் ஆற்றில் நீர் இல்லாத தருணத்தில் தெரு நாய்கள் குறித்த ஆற்றிலுள்ள கற்பாறைகளில்  தனது குட்டிகளுடன் வாழ்ந்து வந்தன.

இந்நிலையில் குறித்த ஆற்றில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட  வெள்ளத்தால் 10 நாய் குட்டிகள் ஆற்றில் உள்ள பாறை  மீது தவித்துக்கொண்டிருந்தன.

தாய் நாயனது தனது குட்டிகளை காப்பாற்ற பெரும் போராட்டத்தில் ஈடுப்பட்டது.

அவ்வாறு தொடர்தும் முயற்சி செய்தும் தனது குட்டிகளை மீட்க முடியாமல் குறித்த பகுதியில் நின்று குரைக்கத் தொடங்கியது இதை அவதானித்த அப் பகுதி மக்கள் தீயணைப்பு படையினருக்கு வழங்கிய தகவலை அடுத்து அங்கு சென்ற படையினர் குட்டிகளை மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது எல்லோரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.