(ஆர்.விதுஷா )

வரக்காப்பொல பிரதேசத்தில் காலவதியான கடவுச்சீட்டுடன் பணி புரிந்த பங்களாதேஷ்  பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

நங்கல -துல்கிரிய  பிரதேசத்தில் இயங்கி வந்த வாகன பழுதுபார்க்கும் இடத்தில் பணிபுரிந்து வந்த  குறித்த பங்களாதேஷ் பிரஜையின் கடவுச்சீட்டு காலாவதியாகிய நிலையில் தொடர்ந்து இவர் நாட்டுக்குள் சட்டவிரோதமாக  தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் இன்று  பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார் .   

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரிய வெளிநாட்டு பிரஜை  தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.