அமெரிக்காவின் கொலோரடோவில் கடந்த வியாழக்கிழமை இரவு ஒரு கர்ப்பிணித் தாயினதும் அவருடைய மகள்களாக இருக்க கூடும் என்ற இரு பெண் பிள்ளைகளின் உடல்களை அப் பகுதி பொலிஸார் மீட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

34 வயதான ஷனான் வாட்ஸ் மற்றம் அவரது மகள்கள் 3 வயதான பெல்லா 4 வயதான செலேஸ்டே ஆகியோர் அவர்களுடைய ஃபெர்ட்ரிக் வீட்டிலிருந்து கடந்த திங்கட் கிழமை காணாமல் போயுள்ளனர்.

இந் நிலையில் ஷனான் வாட்ஸின் உடலானது கடந்த வியாழக்கிழமை அனடர்கோ பெற்றோலியம் நிறுவனத்திற்கு உரித்தான கொலோரடோவின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வு செய்யும் இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவத்தில் தான் ஷனானின் கணவரான கிறிஸ்தோபர் வாட்ஸ் பணிபுரிகின்றார் என பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

ஷனானின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே இரு குழந்தைகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட இரு குழந்தைகளும் ஒரு பேஸ்புக் பதிவின் மூலம் ஷனானினுடைய குழந்தைகள் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

அதன் பின்னர் சந்தேகத்தின் பேரில் வியாழக்கிழமை பொலிஸார் கிறிஸ்தோபரை கைது செய்து அவரின் மீது 3 கொலைக் குற்றம் சுமத்தி வழக்குத் தாக்கல் செய்தனர்.

வழக்கை விசாரணை செய்த வெல்ட் மாவாட்ட நீதவான் வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளார்.

கிறிஸ்தோபருக்கு பினையில் செல்ல அனுமதி வழங்காத நீதி மன்றம் விளக்கமறியலில் வைத்துள்ளதாக மாவட்ட வழக்கறிஞர் மைக்கல் ரூர்கி தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தோபர் கைது செய்யப்படவதற்கு முன்னர் தனது கர்ப்பிணி மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் தொடர்பாக கூறியதாவது,

‘எனது மனைவி மற்றும் குழந்தைகள் இப்போது எங்காவது பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என நம்பகின்றேன்

இதற்கு முன்னர் இந்த வீடு இப்படி இருந்ததில்லை கடந்த இரவு அதிர்ச்சிகரமானதாக இருந்தது இவர்கள் யாருமில்லாமல் இனி இந்த வீட்டில் நான் இருக்கமாட்டேன்” என தெரிவித்துள்ளார்.