தொட்டலங்க - ஹஜிமா வத்தையில் சட்டவிரோதமாக மின் இணைப்பை பெற்றிருந்த 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை மின்சார சபையின் விசேட சுற்றிவளைப்பு பிரிவால் இன்று அதிகாலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முகத்துவாரம் பொலிஸாரின் உதவியுடன் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் கிரேண்பாஸ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.