மடுல்சீமை பெறுந்தோட்ட  கம்பணிகளுக்கு கீழ் இயங்கும் அனைத்து தோட்ட உத்தியோகத்தர்களும் இன்று முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மடுல்சீமை பெறுந்தோட்ட கம்பணிகளுக்கு கீழ் இயங்கும் பொகவந்தலாவ கெர்க்கஸ்சோலட் தெரேசியா,மோரா, கிவ், சென்ஜோன்டிலரி, வெஞ்சர் மற்றும்  கிலானி ஆகிய தோட்டபகுதிகளின்  காரியாளயங்கள், தேயிலை தொழிற்சாலை உத்தியோகத்தர்களும் இன்று முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த உத்தியோகத்தர்களுக்கான மேலதிக கொடுப்பனவானது  08 மாத காலமாக வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே குறித்த பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 இவ் ஆர்ப்பாட்டத்தின் மூலமாக எங்களுக்கு கிடைக்க வேண்டிய கொடுப்பனவுகளை வழங்கப்பட வேண்டும்மெனவும் ,அவ்வாறு வழங்காவிடின் குறித்த பணிபகிஷ்கரிப்பானது நீடிக்குமென உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.