ஆப்கானிஸ்தானில் கடந்த புதன் கிழமை பயங்கரவாதிகள் ஷியா பிரிவினரை குறி வைத்து தாக்குதல் நடத்தியதின் காரணமாக தொடர்ந்தும் 1000 பாடசாலைகள் பாதுகாப்பு நோக்கிற்காக மூடப்பட்டுள்ளன.

தனியார் கல்வி நிறுவனத்தில் கடந்த புதன் கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 48 மாணவ ,மாணவிகள் பலியானதோடு 67 பேர் படுகாயமடைந்தனர்.

இதன் காரணமாக கால வரையறையின்றி 1000 பாடசாலைகள் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.