யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் டீகே இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘காட்டேரி’ படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியிருக்கிறது.

முன்னணி தயாரிப்பாளரான கே. ஈ. ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த காட்டேரி படத்தில் வைபவ், கருணாகரன், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, மனாலி ரத்தோட் என பல நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு எஸ். என். பிரசாத் இசையமைத்திருக்கிறார். கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டீ.கே.