பாகிஸ்தானின் 22ஆவது பிரதமராக நாளை பதவியேற்கவுள்ள இம்ரான் கான் மீதான வாக்கெடுப்பில் 176 ஆதரவு வாக்குடன் வெற்றிப்பெற்றுள்ளார்.

பாகிஸ்தானில் 270 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய மாகாண சட்ட சபைகளுக்கும் தேர்தல் நடந்தது.

தேர்தல் முடிவில் இம்ரான் கானின் கட்சி 116 இடங்களிலும், ஆளும் கட்சியாக இருந்த நவாஸ் ஷெரீப்பின்  கட்சி 64 இடங்களிலும், பாக்கிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்றன.

ஆட்சி அமைக்க 137 தொகுதிகள் அவசியம் என்பதால் சிறிய மற்றும் சுயேட்சை கட்சிகளின் ஆதரவை இம்ரான் கான் நாடினார்.

கூட்டணி அமைக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இம்ரான் கான் உட்பட வெற்றி பெற்றவர்கள் பதவியேற்றனர்.

இந் நிலையில் இம்ரான் கான் நாளை பாகிஸ்தானின் 22ஆவது பிரதமராக பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று இம்ரானுக்கெதிராக பாராளுமன்றில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.

இதில் 176 ஆதரவு வாக்குகளுடன் இம்ரான் கான் நளை பிரதமராக தேர்வு செய்யப்பட்டு அவரின் பதவியேற்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.