கடும் வயிற்று வலிக்­குள்­ளான நிலையில் வைத்தியசாலையில் அனு­ம­திக்­கப்­பட்ட பெண்­ணொ­ரு­வரின் நுரை­யீ­ரலில் பேனா மூடி­யொன்று இருப்­பதைக் கண்டு வைத்தியர்கள் அதிர்ச்­சி­ய­டைந்த சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

வாங்டொங் மாகா­ணத்தைச் சேர்ந்த மேற்­படி 49 வயது பெண் 40 வரு­டங்­க­ளுக்கு முன்னர் 9 வயது சிறு­மி­யாக இருந்த போது பாட­சா­லையில் பிளாஸ்டிக் பேனா மூடியை எடுத்து விளை­யா­டிய வேளை அதனைத் தவ­று­த­லாக மூக்­கி­னூ­டாக உள்ளே எடுத்­துள்ளார்.

ஆனால் அதன்போது எது­வித பாதிப்பும் ஏற்­ப­டா­ததால் அச் சம்­ப­வத்தைக் காலப்போக்கில் அவர் மறந்­துள்ளார்.

இந்­நி­லையில் அவர் சுமார் 30 வய­தை­ய­டைந்த போது அவ­ருக்கு கடு­மை­யான இருமல் ஏற்­பட்­டுள்­ளது. தொடர்ந்து அவர் கடந்த 19 வருட கால­மாக கடும் இரு­மலால் துன்­பத்தை அனு­ப­வித்து வந்­துள்ளார்.

இந்­நி­லையில் அவர் கவோதாங் பிராந்­தி­யத்­தி­லுள்ள வைத்தியசாலைக்கு வயிற்­று­வ­லிக்­காக சிகிச்சை பெறச் சென்ற போதே சீ.ரி. ஊடு­காட்டும் பரி­சோ­த­னையின் மூலம் அவ­ரது நுரை­யீ­ரலில் பிளாஸ்டிக் பேனா மூடி இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து சத்­தி­ர­சி­கிச்சை நிபுணர் லீ பெய்மிங் தலை­மை­யி­லான வைத்தியர்கள் அவ­ருக்கு அறுவை சிகிச்­சையை மேற்­கொண்டு பேனா மூடி சிக்­கி­யி­ருந்த நுரை­யீரல் பகு­தியை வெட்டி அகற்றியுள்ளனர்.