ஹர்டிக் பாண்ட்யா சகலதுறைவீரர் இல்லை என மேற்கிந்திய அணியின்  முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் வர்ணணையாளருமான  மைக்கல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.

அவர் துடுப்பாட்ட வீரராக பாண்ட்யா சிறப்பாக விளையாடவில்லை, பந்து வீச்சிலும் அவர்; துல்லியமாக  பந்து வீசவில்லை என  தெரிவித்துள்ள ஹோல்டிங் இதன் காரணமாக அவர் இந்திய டெஸ்ட் அணியில் சகலதுறை வீரராக இடம்பிடிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய டெஸட் வேகப்பந்து வீச்சு குழாம் தற்போது சரியான சமநிலையுடன் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் ஹர்டிக் பாண்ட்யாவை சகலதுறை வீரராக விளையாடுகின்றனர்,பந்து வீச்சிற்கு அவர் உதவுவார் என்ற நோக்கதிலேயே இந்திய அணி அவரை இணைத்துக்கொண்டுள்ளது என தெரிவித்துள்ள ஹோல்டிங் அவர் அணிக்கு பலனளி;க்க கூடிய விதத்தில் பந்து வீசவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஹர்டிக் பாண்ட்யா சதங்களை பெறவேண்டிய தேவையில்லை அவர் 60 ,70 ஓட்டங்களை பெற்றாலே போதும் அத்துடன் இரண்டு மூன்று விக்கெட்களைவ  வீழ்த்தினாலும் போதும்  எனவும் ஹோல்டிங் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அவர் அந்த ஓட்டங்களை பெறுகின்றார் இல்லை என சுட்டிக்காட்டியுள்ள ஹோல்டிங் அவர் பந்து வீச்சிலும் சிறப்பாக செயற்படவில்லை அது மிக முக்கியமான விடயம் என குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ச்சியாக சிறப்பாக பந்து வீசவில்லை துடுப்பாட்ட வீரர்களிற்கு அழுத்தத்தை கொடுக்க கூடிய துல்லிய தன்மை அவரிடம் இல்லை என தெரிவித்துள்ளார்.

நீங்கள் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் என்றால், உங்கள் அணித்தலைவர் உங்களை நம்பியிருக்க வேண்டும் என்றால் நீங்கள் விக்கெட்டை வீழ்த்தவேண்டும் உங்களிடம் துல்லிய தன்மை அவசியம் பாண்ட்யா அப்படிப்பட்டவர் இல்லை எனவும் ஹோல்டிஹங் குறிப்பிட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவில் நான் இருந்தவேளை சிலர் அவர் அடுத்த கபில்தேவ் என தெரிவித்ததை கேள்விப்பட்டேன்,அவர் அடுத்த கபில்தேவ் ஆகமாட்டார் என நான் தெரிவிக்கமாட்டேன் ஆனால்தற்போது அவர் அந்த தரத்தில் இல்லை  இந்திய துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் தொடர்ச்சியாக பங்களிப்பு செய்யக்கூடிய வீரரை கண்டுபிடிக்கவேண்டும் எனவும் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பான்ட்யாவை கடுமையாக விமர்சித்த நிலையிலேயே ஹோல்டிங்கின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

ஹர்டிக் பண்ட்யாவை சகலதுறை ஆட்டக்காரர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ளவேண்டும் என சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

பாண்ட்யா துடுப்பாட்ட வீரராக அதிக ஓட்டங்களை குவிக்கவில்லை அவரது பந்து வீச்சில் அணித்தலைவரிற்கு அதிக நம்பிக்கை உள்ளதாக தெரியவில்லை என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சகல துறைவீரர்களின் திறமையை நாங்கள் பாண்ட்யாவிடம் எதிர்பாத்தோம்  ஆனால் அவரால் ஒரே இரவில் சகலதுறை வீரராக முடியவில்லை என ஹர்பஜன் தெரிவித்துள்ளார்