தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சமாதியை நோக்கி அவரது மகன் அழகிரி அமைதிப்பேரணி செல்லவிருப்பதாக அறிவித்துள்ளமை  தி.மு.க.வினரிடையே பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்வரும் ஐந்தாம் திகதி அழகிரி இந்த அமைதிப்பேரணியை நடத்தவுள்ளார்.

அண்ணா வீதியிலிருந்து மெரீனா வரை அவர் ஊர்வலமாக செல்லவுள்ளார்.

இதன் மூலம் அவர் தி.மு.க.வின் தலைமைக்கு நேரடியாக சவால் விடுக்கவுள்ளார் என அழகிரிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்காக அவரது தொண்டர்படை தயாராகிக்கொண்டிருப்பதாகவும்,சுமார் ஒரு இலட்சம் தொண்டர்களை அவர் அமைதிப்பேரணியில் இறக்கவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இவ்வளவு பெரிய தொண்டர்களை அவர்   காண்பித்தால் அது தி.மு.க. தலைமைக்கு விடுக்கப்படும் சவாலாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.