ஸ்ரீலங்கா டெலிகொம் PLC 2018 ஜுன் 30 ஆம் திகதி முடிவுற்ற ஆறு மாதத்திற்கான தனது குழும நிதி செயல்திறன் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. இதில் மொபிடெல் (தனியார்) லிமிடட் உட்பட குழுமத்தின் உரிமையுடையே 8 துணை நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

SLT குழுமம் நிலையான, மொபைல், பிரோட்பாண்ட், நிறுவன தீர்வுகள், மொத்த வியாபாரம் மற்றும் PayTV உட்பட முக்கிய வர்த்தகங்களில் தொடர்ச்சியான வளர்ச்சியை காட்டி இருப்பதோடு இதன்மூலம் 2018 இன் முதல் பாதியில் சாதனை அளவான 39.4 பில்லியன் ரூபாய் ஒருங்கிணைந்த வருவாயை ஈட்டியுள்ளது. 

இது 5.5 வீத வருடாந்திர வளர்ச்சியாகும். குழும அறிக்கையின்படி 2018 முதல் பாதியின் நிகர இலாபம் 2.8 பில்லியன் ரூபாய் என்பதோடு முந்தைய ஆண்டின் இதே காலப்பிரிவுடன் ஒப்பிடுகையில் 13.5 வீத அதிகரிப்பாகும். இந்த காலப்பிரிவுக்கான செயற்பாட்டு செலவு 27.2 பில்லியன் ரூபாய் என்பதோடு இது கடந்த ஆண்டை விடவும் 3.3 வீத அதிகரிப்பாகும்.

ஒழுங்குமுறை செலவு மேலாண்மை மற்றும் செயல்பாட்டு செயல்திறன்கள் காரணமாக குழுமத்தின் வட்டிக்கு முந்தைய வருமானங்கள், வரிகள், தேய்மானம் மற்றும் கடன்தீர் நிதி திரட்டல் 12.2 பில்லியன் ரூபாயை எட்டியிருப்பதோடு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 29.4 வீத இல் இருந்து 30.9 வீத அளவு முன்னேற்றமாகும். மிக முக்கிய விடயமாக அதிக வளர்ச்சி திறனை காட்டும் Fibre-To-The-Home (FTTH) சேவைகள் 2017 முதல் பாதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் தனது வருவாயை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கியுள்ளது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட காலப்பிரிவில் குழுமத்தின் மூலம் சொத்து, தொழிற்சாலை மற்றும் உபகரணங்கள் போன்று தொழில்நுட்பட மேம்படுத்தல், அடிப்படை வசதிகளை விரிவுபடுத்தல், புதிய தொடர்புகள், தகவல்தொடர்பு மற்றும் கட்டமைப்பை மேம்படுத்தல் போன்ற புலனாகாத சொத்துகளுக்காக 10.8 பில்லியன் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதிகரித்துச் செல்லும் முதலீடுகளுடன் தேய்மானம் 9.2 பில்லியன் ரூபாய் என 10.2 வீதம் அதிகரித்துள்ளது. 

2018 முதல் பாதி ஆண்டில் 3.1 பில்லியன் ரூபாய் செயல்பாட்டு லாபம் மற்றும் வரிக்கு முந்தைய லாபம் 3.6 பில்லியன் ரூபாய் என கடந்த ஆண்டை விடவும் முறையே 12.9 வீத மற்றும் 16.2 வீத அதிகரிப்பாகும். 

அண்மைய ஆண்டுகளில் குழுமம் அனைத்து மூலோபாய திட்டங்களுடன் தொடர்ந்து முதலீடுகளை மேற்கொண்டதன் விளைவே இதுவாகும். இதனால் எமது வளர்ச்சி வீதம் மிக நிலையானதாகும்.

இலங்கையின் முன்னோடி தொலைத்தொடர்பு சேவை வழங்குனராக இருக்கும் இந்த குழுமம் அதன் பங்களிப்பின் ஊடே நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்வதை இலக்காகக் கொண்டதாகும் என்றும் அவர் கூறினார்.

உடைமை நிறுவனமான – ஸ்ரீலங்கா டெலிகொம் 2018 முதல் ஆறு மாதப் பகுதியில் ஒரு பில்லியன் நிகர இலாபத்தை பெற்றிருப்பதோடு அது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 62.1 வீத அபார வளர்ச்சியாகும். இலாப அதிகரிப்புக்கு பிரதான காரணியாக 5.3 வீத இலாப அதிகரிப்பு மதிப்பீடு மற்றும் செயற்பாட்டு செலவு 1.9 வீத என குறைவான அளவை தக்கவைத்துக் கொண்டதாகும்.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட காலப்பிரிவில் குழுமத்தின் இலாபமாக 23.3 பில்லியன் ரூபாய் மற்றும் 16.6 பில்லியன் ரூபாய் செயற்பாட்டு செலவையும் கொண்டுள்ளது. உடைமை நிறுவனத்தின் வட்டிக்கு முந்தைய வருமானங்கள், வரிகள், தேய்மானம் மற்றும் கடன்தீர் நிதி திரட்டல் கடந்த ஆண்டின் மதிப்பான 26.3 வீத இல் இருந்து 28.7 வீத அதிகரிப்பாகும். இலாபம் அதிகரிப்பு மற்றும் செலவு கட்டுப்பாடே இதற்கு காரணமாகும்.

தேய்மானம் 5.9 பில்லியன் ரூபாய் எனும் 12.8 வீத வீதமாக அதிகரித்திருப்பதோடு, அது சொத்து, தொழிற்சாலை மற்றும் உபகரணம் மற்றும் புலனாகாத சொத்துகளை பெறுவதற்காக பயன்படுத்தப்பட்ட 6.8 பில்லின் ரூபாய் முதலீட்டுக்கு சமனாகும். வரிகளுக்கு முந்திய இலாபம் 1.3 பில்லியன் ரூபாய் என்பதோடு அது கடந்த ஆண்டை விடவும் 63.2 வீத அதிகரிப்பாகும்.

உடைமை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கித்தி பெரேரா கூறும்போது,

எதிர்கால சவால்களுக்கு முகம்கொடுக்கும் வகையில் எமது நிறுவனத்தை ஒரு டிஜிட்டல் சேவை வழங்குனராக மாற்றுவதே மூலோபாய திட்டமாகும். FTTH, LTE, Fiber VPN மற்றும் Cloud தொழில்நுட்பங்கள் மீதான அதிக கேள்வி மூலம் மக்கள் வளர்ந்து வரும் டிஜிட்டல் கலாசாரத்தை நோக்கி பயணிக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.

மேலும் நாட்டின் வேகமான பிற்கொடுப்பனவு Pay Television சேவை வழங்குனரான PEO TV 2018 முதல் ஆறு மாதத்தில் 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18 வீத இலாப அதிகரிப்பு வேகத்தை காட்டுவதோடு இந்த காலத்திற்குள் பார்வையாளர் எண்ணிக்கை 29 வீத ஆக அதிகரித்துள்ளது. இது வலுவான விற்பனை செயற்பாடு மற்றும் Education On Demand மற்றும் சர்வதேச தொலைக்காட்சி சேனல்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் தொடர்ச்சியாக உள்ளடக்கத்தை வலுப்படுத்தியதன் விளையாவாக ஏற்பட்டுள்ளது. PEO TV இன் ஆக்கபூர்வமான மற்றும் மேம்பட்ட உள்ளடக்கம் மக்களிடம் வரவேற்பை பெற்றிருப்பதை உறுதி செய்கிறது என்றார்.

முதன்மை செயல் அதிகாரி பிரியன்த பெர்னாண்டஸ் கூறியதாவது, 

சிறப்பான செயற்பாடு மற்றும் வாடிக்கையாளர்களுக்காக உயர்மட்ட அனுபவத்தை வழங்குவதே தற்போது எமது இலக்காக உள்ளதோடு நாடு முழுவதும் பரந்த பலம்கொண்ட பிராந்திய டிஜிட்டல் கலாசாரத்தை நோக்கி பயணிக்கும் எமது வாடிக்கையாளர்களின் பல்வேறுபட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தயாராக உள்ளோம். 

கைபேசி நிறுவனமான மொபிடெல் (தனியார்) லிமிடெட் கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் வருவாய் மற்றும் முக்கிய இலாப குறிகாட்டிகளை தொடர்ந்து அதிகரித்துள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட காலப்பிரிவில் சவாலான பொருளாதார மற்றும் தொழிற்துறை நிலைமைகள் இருந்த போதிலும் வருவாய் வளர்ச்சியை எட்டியுள்ளது. 2018 முதல் ஆறு மாதங்களில் நிறுவனத்தின் வருவாய் 18.8 பில்லியனாக இருப்பதோடு அது 2017 இன் குறித்த காலத்துடன் ஒப்பிடுகையில் 5 வீத அதிகரிப்பாகும்.

2017 முதல் பாதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒரு பில்லியன் ரூபாயை நெருங்கும் இலாப அதிகரிப்பு காரணமாக முக்கிய இலாப குறிகாட்டிகளில் சாதகமான வாளர்ச்சியை காண்பிக்க முடிந்துள்ளது. 2018 முதல் பாதிக்கான வட்டிக்கு முந்தைய வருமானங்கள், வரிகள், தேய்மானம் மற்றும் கடன்தீர் நிதி திரட்டல் மற்றும் வட்டி மற்றும் வரிக்கு முன் வருவாய் கடந்த ஆண்டை விடவும் முறையே 0.5 வீத மற்றும் 0.3 வீத இனால் அதிகரித்துள்ளது. 

எவ்வாறாயினும் 2017 முதல் பாதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிகர இலாபம் சரிவு கண்டிருப்பதன் காரணமாக வட்டி இலாபம் கீழிறங்கி இருப்பதோடு அது 1.7 பில்லியன் ருபாய் ஆகும். இது 2017 முதல் பாதி ஆண்டை விடவும் 115 மில்லியன் ரூபாய் குறைவாகும். இதனால் குறித்த காலத்தில் வட்டி இலாபம் கீழிறங்கி இருப்பதன் காரணமாக சரிவு கண்டிருக்கும் நிகர இலாபம் தவிர்த்து 2018 முதல் பாதி ஆண்டின் அனைத்து பிரதான அளவீடுகளிலும் முன்னேற்றம் பெறுவதற்கு மொபிடலால முடிந்துள்ளது.